ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்துராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்துகாங்கிரஸ் கட்சி சார்பில் தபால் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம்போடும் போராட்டம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தபால் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-21 21:32 GMT

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தபால் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

பூட்டு போடும் போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கையை கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சூரம்பட்டி எஸ்.கே.சி. ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டனர்.

ஊர்வலம்

இந்த போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். எஸ்.கே.சி. ரோட்டில் ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று சூரம்பட்டி தபால் நிலையத்தை பூட்டு போடுவதற்காக கையில் பூட்டுடன் புறப்பட்டனர். சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு செல்லாமல் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அவரை பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் கவுன்சிலர் ஈ.பி.ரவி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவஹர் அலி, மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்