ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
வடக்கன்குளத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வடக்கன்குளம்:
வடக்கன்குளத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் 25 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பை வழங்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தொண்டர் தேவதாசுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும் வள்ளியூர் யூனியன் துணைத் தலைவருமான வெங்கடேஷ் தன்ராஜ், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எட்வின், வள்ளியூர் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் அருள் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.