முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாசத்தோடு அரவணைத்த ராகுல்காந்தி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாசத்தோடு அரவணைத்த ராகுல்காந்தி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாசத்தோடு அரவணைத்த ராகுல்காந்தி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது ராகுல்காந்திக்கு தனி மரியாதை உண்டு. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தன்னுடைய பாதயாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அதன்படி ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு நேற்று மாலை பாதயாத்திரையை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் வந்தார். அங்கு அவர் ராகுல்காந்தி வருகைக்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் ராகுல்காந்தி வந்ததும் சால்வை அணிவித்து அவரை கட்டித்தழுவி வரவேற்றார். இதனை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையை பிடித்துக் கொண்டு காந்தி மண்டபத்திற்குள் உற்சாகமாக அழைத்து சென்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அரவணைத்தபடி ராகுல்காந்தி சென்றதை பார்த்து இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் ரசித்தனர்.
மேலும் பொதுக்கூட்டத்தில் பேச்சின் நிறைவாக ராகுல்காந்தி, பாதயாத்திரையை தொடங்கி வைத்த சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.