மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.இதில் மாடு முட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-02 20:47 GMT

மேலூர், 

மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.இதில் மாடு முட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர்நாடு அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. பாரம்பரிய வழக்கப்படி கிராம பெரியவர்கள் கோவிலில் இருந்து ஜவுளி பொட்டலங்களை மஞ்சுவிரட்டு திடலுக்கு ஊர்வலமாக கொண்டுவந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு ஜவுளிகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் சீறிப்பாய்ந்தன

அதனை தொடர்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். வடக்கு நாவினிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார். அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். மாடுகள் முட்டி 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.. கீழவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்