மதுபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் - தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தூத்துக்குடி அருகே மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-11-18 01:16 GMT

கோப்புப்படம் 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில், அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறால் சின்னத்துரையை அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. உடன், பிள்ளைகளையும் அழைத்துச் சென்ற சின்னத்துரையின் மனைவி, அவரின் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், தீபாவளியன்று மதுபோதையில் மாமியார் வீட்டுக்குச் சென்ற சின்னத்துரை, மனைவி மற்றும் பிள்ளைகளை தன்னுடன் வருமாறு கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறு தீபாவளி முடிந்த பின்பும் தொடர்ந்த நிலையில், ஆத்திரத்தில் இருந்த சின்னத்துரையின் 17 வயது மகன், தூத்துக்குடி மையவாடியில் வைத்து தந்தையுடன் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 17 வயது சிறுவனை கைது செய்த நிலையில், அடிக்கடி மதுபோதையில் தனது தாயுடன் சண்டை பிடித்து, அவரை அடித்து துன்புறுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்