ராதா- கிருஷ்ணர் திருக்கல்யாண விழா

கோவில்பட்டியில் ராதா- கிருஷ்ணர் திருக்கல்யாண விழா நடந்தது.

Update: 2023-05-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி காயத்ரி திருமண மண்டபத்தில் பஜனாம்ருத மண்டலி சார்பில் ராதா- கிருஷ்ணர் திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், ராதா மாதவ ஆவாஹனம், 9 மணிக்கு அஷ்டபதி பஜனை, மாலை 6 மணிக்கு ராதா-கிருஷ்ணர் செண்பகவல்லி அம்மன் ரத வீதிகளில் ஊர்வலம், மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பூஜை, பஞ்சப்பதி, திவ்ய நாம சங்கிய சங்கீர்த்தனம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு உஞ்ஜ விருத்தியும், 9 மணிக்கு சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு ராதா - கிருஷ்ணர் திருமண விழாவும், தொடர்ந்து ஆஞ்சநேய உத்ஸவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்