மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2022-08-14 18:12 GMT


சிவகங்கை அருகே டி.உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்காபள்ளம் ஆகிய கிராம மக்கள் சார்பில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. நாட்டுக்கோட்டை சாலையில் இருந்து மானாமதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது. இதனை ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் மீனாள் முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் மொத்தம் 34 வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்