காரைக்குடி,
காரைக்குடி அருகே கல்லலில் உள்ள கற்பகவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. கல்லல்-மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் மொத்தம் 20 வண்டிகள் கலந்துகொண்டு பெரியகுதிரை மற்றும் சின்ன குதிரை வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கல்லல் வெல்கம்பிராய்லர்ஸ் வண்டியும், 2-வது பரிசை பேராவூரணி அப்பாஸ், 3-வது பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ், 4-வது பரிசை கல்லல் ராயல் ரஞ்சித் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன குதிரை வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ் வண்டியும், 2-வது பரிசை பட்டுக்கோட்டை லெலின், 3-வது பரிசை செறுவாவிடுதி போத்தியப்பன், 4-வது பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.