மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் உள்ள கோவில், ஆலய திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-06-03 18:22 GMT

காரைக்குடி, 

காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் உள்ள கோவில், ஆலய திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பொங்கல் விழா

காரைக்குடி கழனிவாசல் இடைச்சியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கழனிவாசல்-சூரக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் அக்னிமுருகன் வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி சதீஷ் நண்பர்கள் வண்டியும், 3வது பரிசை பொய்யாதநல்லூர் கபீப்முகமது மற்றும் திருப்புனவாசல் தங்கராசு வண்டியும், 4-வது பரிசை திருவாதவூர் புதுப்பட்டி சின்னசாமி சிவபாலன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கழனிவாசல் மகிழ்மித்ரன்சுந்தர் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி பிரதாப் வெள்ளையப்பன் வண்டியும், 3-வது பரிசை கல்லூரணி பாலாஜி வண்டியும், 4-வது பரிசை சிங்கம்புணரி யாசிகா வண்டியும் பெற்றன.

பந்தயம்

இதேபோல் கல்லல் ஒன்றியம் பனங்குடி இறைஏசு ஆலய திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பனங்குடி-கண்டிப்பட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும், 2-வது பரிசை பல்லவராயன்பட்டி சங்கீதா மற்றும் நைனாப்பட்டி மூக்கையா வண்டியும், 3-வது பரிசை வல்லாளப்பட்டி பூஞ்சோலை வண்டியும், 4-வது பரிசை கம்பம் முத்துப்பாண்டி வண்டியும் பெற்றன.

சின்னமாடு

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மதகுபட்டி பி.ஆர்.அழகு வண்டியும், 2-வது பரிசை கம்பம் சுதர்சன் வண்டியும், 3-வது பரிசை கொன்னப்பட்டி முத்துப்பிடாரி அம்மன் வண்டியும், 4-வது பரிசை புலிமலைப்பட்டி தர்சிகாகார்த்திகேயன் வண்டியும் பெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்