நாய்களுக்கு வெறிேநாய் தடுப்பூசி
உலக வெறிநாய் தின சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் உலக வெறிநாய் தின சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நல்லூர் ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் 25-க்கும் மேற்பட்ட வளர்ப்பு செல்ல பிராணிகளுக்கு கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி தடுப்பூசி செலுத்தினார். தொடர்ந்து வெறி நாய் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் உலக வெறிநாய் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.