செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி- விழிப்புணர்வு

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி- விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-02-15 19:40 GMT

கறம்பக்குடி கால்நடை மருத்துவமனையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை துறை சார்பில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தாங்கள் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதனை செய்தனர். செல்லப் பிராணிகளை தாக்கும் நோய் மற்றும் பராமரிப்பு குறித்து செல்ல பிராணிகளின் உரிமையாளர்களுக்கு கால்நடை மருத்துவர்கள் ரெங்கராஜன், பாண்டியராஜன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவமனை அருகே உள்ள அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வெறி நாய் கடித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்வது என்பது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்