வெறிநாய் தடுப்பூசி முகாம்
கடையநல்லூரில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது. முகாமை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர் அசன்காசிம், சிவக்குமார், இம்தியாஸ் அஹமது ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் நகராட்சி பகுதியில் வீட்டில் வளர்க்கும் 125 நாய்களுக்கு இலவசமாக வெறிநாய் தடுப்பூசி செலுத்தினர். இதில் சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, நகராட்சி உறுப்பினர்கள் அக்பர் அலி, ராமகிருஷ்ணன், அரபா வஹாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.