வெறி நாய்க்கடி தடுப்பூசி முகாம்

செங்கோட்டை கால்நடை மருத்துவமனையில் வெறி நாய்க்கடி தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-09-28 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உலக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி தினத்தை முன்னிட்டு செங்கோட்டை நகராட்சி, குற்றாலம் ரோட்டரி கிளப் சக்தி, செங்கோட்டை கால்நடை மருத்துவமனை சார்பில் சிறப்பு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு செங்கோட்டை நகராட்சி ஆணயாளா் பார்கவி தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கால்நடை மருத்துவா் ஆபிரகாம் ஜாப்ரி ஞானராஜ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முன்னதாக வெறிநோய்க்கடி நோய் தடுப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனா் மருத்துவா் மகேஷ்வரி, ஓய்வு பெற்ற துணை இயக்குனா்கள் டாக்டர் மாரிமுத்து, டாக்டா் செண்பகக்குமார், மற்றும் புளியரை கால்நடை மருத்துவர் ஜெயபால்ராஜா, டாக்டர்கள் வெள்ளைப்பாண்டி, சிவக்குமார், இளம்தமிழ், நகராட்சி சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி, நகராட்சி சுகாதார மேற்பார்வையாளா்கள் முத்துமாணிக்கம், காளியப்பன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்