டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-06-22 15:04 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், பள்ளி மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை இணையவழியில் நடத்த உள்ளது. இப்போட்டியில் பங்குபெற விரும்புகிறவர்கள் https://forms.gle/S3TQ6c5dvAQa5UWQ7 என்ற இணைப்பின் மூலமாக வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ், அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் போட்டிகள் பற்றி விவரம் அறிந்து கொள்ள sacoeitevents@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 8903484336 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்