தொடர் மின்தடை புகார்களுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

தொடர் மின்தடை புகார்களுக்கு விரைவில் தீர்வு காண மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

Update: 2022-06-22 04:28 GMT

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலுமதாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் பல்லாவரம் 2-வது மண்டல அலுவலகத்தில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவன துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மண்டலத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் அளித்தனர். பின்னர் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள் 600-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். பெரும்பாலான கோரிக்கைகள் மின்தடை குறித்து வருவதால் மின்தடை ஏற்படாமல் விரைவில் தீர்வு காண மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம், கேபிள்கள் புதைப்பது போன்ற பணிகளால் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. தொடர்ந்து புகார்கள் வருவதால் இவற்றை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்