தரமான சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தரமான சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அருள்புரம்,
புதிதாக சாலை போடப்படும் போது பழைய சாலையை தோண்டி எடுத்து விட்டு அதன் பிறகுதான் சாலை போட வேண்டும் என்ற தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவை பின்பற்றாமல் திருப்பூர் ்அருகே கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையத்திலிருந்து அய்யம்பாளையம் வரை விட்டு விட்டு சாலை போடப்பட்டுள்ளது. மேலும் நன்றாக உள்ள சாலையை மீண்டும் போடப்பட்டுள்ளது. பல இடங்களில் மோசமாக உள்ள சாலையை சீரமைக்காமல் நன்றாக உள்ள சாலையை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.