கால்வாயில் வந்த 10 அடி நீள மலைப்பாம்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கால்வாயில் வந்த 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

Update: 2022-09-06 17:12 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். விவசாயி. இவரது விவசாய நிலத்தின் அருகே வாணியாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. இது குறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் பாம்பை விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்