பறவைகளின் தாகம் தீர்க்க பானைகளில் தண்ணீர் வைப்பு
குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் பறவைகளின் தாகம் தீர்க்க பாகைளில் தண்ணீர் வைக்கப்பட்டது.
கோடை காலத்தை கருத்தில் கொண்டு பறவைகளின் தாகம் தீர்க்க போலீஸ் நிலையங்களில் பறவைகளுக்காக பாத்திரங்களில் தண்ணீர் வைக்குமாறு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா உள்ளிட்ட போலீசார் காவல் நிலைய வளாகத்தில் பறவைகள் தாகம் தீர்க்க 3 இடங்களில் தினமும் தண்ணீர் வைத்து வருகின்றனர்.
வெயில் நேரத்தின் போது தினந்தோறும் காக்கைகள் தேடி வந்து அங்கு பானைகளில் வைத்திருந்த தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொள்கிறது.