தூய ஜெயராக்கினி அன்னை தேவாலய தேர்பவனி
சேலம் செவ்வாய்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை தேவாலய தேர்பவனி நடந்தது.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்து வந்தது. முக்கிய நாளான நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய ஜெயராக்கினி அன்னை சொரூபம் வைக்கப்பட்டது. தேர்பவனியை சேலம் மறைமாவட்ட முதன்மை குரு அருளப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேவாலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, செவ்வாய்பேட்டையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாலய பங்கு தந்தை அழகுசெல்வன், உதவி பங்குதந்தை அருள்வழவன், துணைத்தலைவர் சகாயராஜ், செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் ஜேக்கப் மற்றும் விமல் ஆகியோர் செய்திருந்தனர்.