தேங்காய் கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்பு

தேங்காய் கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்பு

Update: 2023-10-18 12:20 GMT

திருப்பூர்

தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் விளைவித்த கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,600 மெட்ரிக்.டன் அரவை கொப்பரையும், 400 மெட்ரிக்.டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்யவருகிற நவம்பர் 26-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவை தேங்காய் கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172 கோடியே 92 லட்சத்து 80 ஆயிரத்துக்கு அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேரிலோ அல்லது காங்கயம் 9940919150, பொங்கலூர் 9942420525, பெதப்பம்பட்டி 9710921187, அலங்கியம் 9385820581, மூலனூர், 9865425708, உடுமலை 9443962834, சேவூர் 9842931585 ஆகிய செல்போன் எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரைக் ெகாள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

============

Tags:    

மேலும் செய்திகள்