ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, மிளகாய் கொள்முதல்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, மிளகாய் கொள்முதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-29 18:45 GMT

ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின்கீழ் செயல்படும் எட்டிவயல் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ராமநாதபுரம் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் வத்தல் 448 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.19,400-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.17,520-க்கும் மொத்தம் ரூ.74,378-க்கு விற்பனை செய்தனர். பருத்தி 57 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.6,900-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.6,500-க்கும் மொத்தம் ரூ.3,769-க்கும் விற்று பயனடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் முதுகுளத்தூர் மற்றும் இதர சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் வத்தல் 1500 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.18,300-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16,500-க்கும் மொத்தம் ரூ.2,41,872-க்கு விற்பனை செய்தனர். பருத்தி 202 கிலோ கொண்டு வந்து குவிண்டால் ரூ.6,600-க்கும் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ரூ.6,500-க்கும் மொத்தம் ரூ.13,332-க்கும் விற்று பயனடைந்துள்ளனர்.

ஏலத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த வசதியினை விவசாயிகள் பயன்படுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை லாபகரமான விலைக்கு விற்று பயனடையுமாறு ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்