அரசமலை நவகுடியில் புரவி எடுப்பு திருவிழா

அரசமலை நவகுடியில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

Update: 2022-09-09 18:39 GMT

காரையூர் அருகே உள்ள அரசமலை நவகுடி கிராமத்தில் அழகு திருமேனி அய்யனார் கோவில் உள்ளது. மேலும், இங்கு விள்ளியப்ப அய்யனார், விலங்கு கருப்பர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அழகு திருமேனி அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாமியாட்டத்துடன் அழகு திருமேனி அய்யனார் கோவிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு புரவிகள் செய்யப்பட்டு இருந்த சாத்தனூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு களிமண்ணால் செய்யப்பட்ட புரவிகள், அய்யனார் சிலைகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள நவகுடி கிராமத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு புரவிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அரசமலை, வையாபுரி பகுதி சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்