அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் அருகே எழுநூற்றி மங்கலம் கிராமத்தில் புலிகுட்டி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி காராவயல் கிராமத்தில் மண்ணால் செய்யப்பட்ட மதலைகள் மற்றும் குதிரைகள், காளைகள் போன்ற சிலைகள் செய்யப்பட்டு தாயார் நிலையில் இருந்தது. இதையடுத்து பக்தர்கள் அங்கு சென்று சிலைகளை ேதாளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக அய்யனார் கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அய்யனாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.