புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

Update: 2022-09-24 18:45 GMT

நீடாமங்கலம் பகுதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சீதா, லட்சுமணன், சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கட ஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்