முதியவருக்கு மதுபாட்டில் குத்து: தொழிலாளி கைது
பெரியதாழையில் முதியவரை மதுபாட்டிலால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம்:
பெரியதாழை சேவியர் காலனியை சேர்ந்த லாரன்ஸ் மகன் சூசை அடைக்கலம் (வயது 76). இவரும், இதே பகுதியை சேர்ந்த டேனியல் மகன் காந்தியும்(52). இருவரும் கூலி தொழிலாளிகள். சம்பவத்தன்று பெரியதாழை பஸ்நிலையம் அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டு கட்டிப்பிடித்து தரையில் உருண்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த காந்தி பீர்பாட்டிலை உடைத்து சூசை அடைக்கலத்தை குத்தி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்று விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில்
தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்து காந்தியை கைது செய்தார்.