குடிபோதையில் தகராறு; ஒருவருக்கு பீர்பாட்டில் குத்து

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்்.

Update: 2023-02-16 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க மேலூர் அருகே பேப்பனையன்பட்டியை சேர்ந்த வீரணம், அவருடைய உறவினர் பெரியசாமி ஆகியோர் வந்தனர். இதையொட்டி அவர்கள் சுக்காம்பட்டி சாலையில் உள்ள மதுக்கடையில் மது குடித்தனர். அப்போது அருகில் மது குடித்த சிங்கம்புணரி முழுவீரன் தெருவை சேர்ந்த சக்திவேலுக்கும்(22), வீரணமுக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் பீர் பாட்டிலால் வீரணம் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவருடைய கூட்டாளியை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்