புலிஞ்சிலை அம்மன் கோவில் கூழ் வார்க்கும் திருவிழா

இஞ்சிமேடு கிராமத்தில் நடந்த புலிஞ்சிலை அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-21 18:00 GMT

சேத்துப்பட்டு

இஞ்சிமேடு கிராமத்தில் நடந்த புலிஞ்சிலை அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள புலிஞ்சிலை அம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. இதனையொட்டி காலையில் புலிஞ்சிலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது, பின்னர் உற்சவமூர்த்தியை அலங்காரம் செய்து ஜோடிக்கப்பட்ட 3 கரகங்களுடன் கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்தனர். தொடர்ந்து பம்பை உடுக்கை அடித்து வேண்டிய வரம் கேட்டனர் பக்தர்கள் கொண்டு வந்த கூழ், கொப்பரையில் ஊற்றப்பட்டது. கூழுக்கும் அம்மனுக்கும் பூஜை செய்து அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது

அதன்பின் அம்மன் வீதி உலா வந்தது. அப்ேபாது மாவிலை தோரணம் கட்டி, மாகோலமிட்டு அம்மனை பயபக்தியுடன் வரவேற்று தேங்காய் மாவிளக்கு பூஜை, நேர்த்தி கடன் செய்தனர். இரவு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையொட்டி இரவு நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை இஞ்சிமேடு கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்