புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-08-11 21:03 GMT

குண்டும், குழியுமான ரோடு 

அவல்பூந்துறை அருகே உள்ள உடுப்பாறை வெள்ளியம்பாளையம்-சோளிபாளையம் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், உடுப்பாறை

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

டி.என்.பாளையம் காமராஜர் ரோடு மூகாம்பிகை நகரில் தாழ்வான நிலையில் மின்கம்பி செல்கிறது. காற்று வீசினால் அறுந்து விழும் வாய்ப்பு உள்ளது. இதனால் பேராபத்து ஏற்படலாம். உடனே மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், டி.என்.பாளையம்

நாய்கள் தொல்லை

ஈரோடு கே.கே.நகரில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. தெருவில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துகின்றன. உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம.ர.சித்தீஸ்வரி, கே.கே.நகர், ஈரோடு.

இருக்கைகள் வேண்டும்

அந்தியூர்-கோபி சத்தி சாலையில் புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ் பயணிகள் அமர இருக்கை இல்லை. இதனால் பயணிகள், பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்து நிற்கும் நிலை உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்த நிழற்குடை அல்லது பயணிகள் இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுமேட்டூர்

பள்ளத்தில் குப்பைத்தொட்டிகள் 

அந்தியூர் மைக்கேல்பாளையம் அருகே பொய்யேரிக்கரை அரசு நடுநிலைப்பள்ளி முன்பு 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவை தற்போது அருகே உள்ள பள்ளத்தில் கிடக்கின்றன. இதனால் குப்பைகள் ரோட்டில் கொட்டப்படுகிறது. பலத்த காற்று வீசும்போது குப்பை தூசுகள் பறந்து செல்கின்றன. இது அந்த வழியாக நடந்தும், வாகனங்களில் செல்பவர்கள் மீது படுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கன் நலன் கருதி குப்பை தொட்டிகளை எடுத்து ரோட்டோரம் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்புசாமி, மைக்கேல்பாளையம்.

போக்குவரத்துக்கு இடையூறு

கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை சாலையின் கிழக்கு வீதியில் தெருவின் மையப்பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த மின்கம்பத்தை தெருவின் ஓரத்தில் மாற்றி அமைத்தால் வாகனங்கள் சென்று வர ஏதுவாகும். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், சோளக்காளிபாளையம்.



குடிநீர் வினியோகம்

பவானி அருகே உள்ள ஆண்டிகுளம் ஊராட்சி பழைய காடையம்பட்டியிலும், தொட்டிபாளையம் ஊராட்சி புதுக்காடையம்பட்டியிலும் கடந்த ஒருவாரமாக ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க ஆவன செய்வார்களா.?

பொதுமக்கள், காடையம்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்