சாலையை சீரமைக்க வேண்டும்
ஈரோடு சோலார் லட்சுமி நகர் இரணியன் வீதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பெரியவர்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சோலாா் லட்சுமிநகா்
தேங்கும் கழிவுநீா்
ஈரோடு அருகே பள்ளபாளையம் பேரூராட்சி எல்லீஸ்பேட்டை ஏசு நாதர் கோவில் தெருவில் சாக்கடை வடிகால் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே கழிவுநீா் தேங்குவதை தடுக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எல்லீஸ்பேட்டை
மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூா் கிராமம், காந்திபுரம் அண்ணாநகரில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயா்ந்து காணப்படுகிறது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நல்லூா்.
குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு மாமரத்துப்பாளையம் தீபம் நகரில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. இதன் காரணமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தீபம் நகருக்கு குப்பை வண்டிகள் வரவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கராஜ், மாமரத்துப்பாளையம் தீபம் நகர்.
பாராட்டு
நசியனூா் சாமிகவுண்டன்பாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வந்தது. இதனை சாிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகாா் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். குடிநீா் குழாய் உடைப்பு சாிசெய்யப்பட்டது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் பொதுமக்கள் சாா்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தொிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சாமிக்கவுண்டன்பாளையம்.