நாம் தமிழர் கட்சி சார்பில் கோவில்களில் தமிழில் வழிபாடு

தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-09-03 15:59 GMT

நாம் தமிழர் கட்சி சார்பில், 'தமிழர்கள் கோவிலில் தமிழில் வழிபாடு' என்ற நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிட்டார். அதன்பேரில், தேனி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், போடி சுப்பிரமணியசாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில், தீர்த்தத்தொட்டி முருகன் கோவில், கம்பம் கம்பராயப்பெருமாள் கோவில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில், சின்னமனூர் பூலானந்தீஸ்வரர்-சிவகாமி அம்மன் கோவில் ஆகிய 7 கோவில்களில் தமிழில் வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த கோவில்களில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் தமிழில் அர்ச்சனை செய்து நாம் தமிழர் கட்சியினர் வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில், மண்டல செயலாளர் பிரேம்சந்தர், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் மற்றும் வீரத்தமிழர் முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்