காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கருக்கன்சாவடி கவுண்டர் கொட்டாய் கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் முப்பூஜை நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பொங்கல் வைத்து படையலிட்டு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு வழிபட்டனர். சாமிக்கு பலியிடும் ஆடுகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.