புதுக்கோட்டையில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல்

புதுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் வழங்கினார்.

Update: 2023-09-04 18:45 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை நல்லமலையில் தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் இல்லம் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று மாலையில் நடந்தது. தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வெள்ளி செங்கோலை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்