புதுக்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டார்.

Update: 2022-11-06 18:45 GMT

புதுக்கோட்டையில் நடந்த சட்டவிழிப்புணர்வு முகாமில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டார்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமை புதுக்கோட்டையில் நடத்தியது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் கவுரவ் குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரீத்தா, குற்றவியில் நீதித்துறை நடுவர் நீதிபதிகள் வி.சேரலாதன், ஜலதி, தாசில்தார் செல்வக்குமார், கிராம உதயம் தொண்டு நிறுவன இயக்குனர் சுந்தரேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார். முகாமில் மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம் மக்களுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்போன், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.பிரீத்தா, முதுநிலை நிர்வாக அலுவலக உதவியாளர் தாமரை செல்வம் மற்றும் ஊழியர்கள் முத்து லெட்சுமி, நம்பிராஜன், பால் செல்வம் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்