புதுக்கோட்டையில் 272 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டையில் 272 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கடத்தியவாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில், புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துவீரப்பன், மாடசாமி, சேகர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 272 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இந்த மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் காரில் இருந்த குலையன்கரிசலை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.