புதுக்கோட்டை : மின்னல் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

அறந்தாங்கி அருகே பறையத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மின்னல் தாக்கியது.

Update: 2022-11-14 14:03 GMT

அறந்தாங்கி,

தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.

மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அறந்தாங்கி அருகே மின்னல்தாக்கி 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்புனவாசல் அருகே பள்ளியில் படித்து கொண்டிருக்கும் இரு மாணவர்களை அவர்களின் உறவினர் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, அறந்தாங்கி அருகே பறையத்தூரில் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்