புதுக்குளம் ஊராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்
புதுக்குளம் ஊராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தட்டார் மடம்:
சாத்தான்குளம் யூனியன் புதுக்குளம் ஊராட்சியில் குலசேகரன் குடியிருப்பில் இருந்து புதுக்குளம் வரை சாலை யூனியன் பொதுநிதிதியில் இருந்து புதுப்பிக்கும் பணி தொடக்க விழா நடந்தது. யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி துணைத் தலைவர் முருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.