அய்யனாரப்பன் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் சாமி தரிசனம்
விக்கிரவாண்டி அருகே அய்யனாரப்பன் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீஅய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி வருகைதந்தார். பின்னர் அவர் அங்கு பக்தர்களுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகிகள், கிராம நாட்டாமைகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.