சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய பொதுமக்கள்

சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய பொதுமக்கள்

Update: 2022-11-30 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகாவில் உள்ள சொக்கனூர் கிராமத்தில் வருகிற 14-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்துகொள்ளும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி சொக்கனூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 100 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் நாளில் தீர்வு காணப்படும் என்று வருவாய்துறையினர் தெரிவித்தனர். இதில் கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்