மக்கள் நல பணியாளர் பயிற்சி கூட்டம்

சீர்காழி அருகே மக்கள் நல பணியாளர் பயிற்சி கூட்டம்

Update: 2023-07-23 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் மக்கள் நல பணியாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்களுக்கு ஒருநாள் கால அளவீடு மற்றும் வருகை பதிவேடு பராமரிப்பு குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ முத்துக்குமரன் கலந்து கொண்டு மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் பணிகளை அளவீடு செய்து எவ்வாறு பணி செய்ய வேண்டும். மேலும் பணி செய்யும் பணியாளர்களை வருகை பதிவேட்டில் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, பணி மேற்பார்வையாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்