பொது கழிவறை வசதி செய்து தர வேண்டும்
குத்தாலம் பஸ் நிலையத்தில் பொது கழிவறை வசதி செய்து தர வேண்டும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் கோரிக்கை
குத்தாலம்:
ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் ப.த.ஆசை த்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குத்தாலம் பஸ் நிலை யத்தில் பயன்பாட்டில் இருந்த கழிவறையை இடித்துவிட்டு புதிய கழிவறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை முடியாமல் சிரமப்படுகின்றனர். கழிவறை இல்லாததால் அங்குள்ள பெண்கள், வணிகர்கள் அவதியடைந் து வருகின்றனர். எனவே பெ ண்கள், வணிகர்கள், பயணிகள் நலன்கருதி குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கழிவறையை புதிய கழிவறை கட்டிடம் கட்டும் வரை ப துமக்கள், வணிகர்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் குத்தாலம் பஸ்நிலையத்தில் தற்காலிகமாக பொது கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.