கூடலூரில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பொதுமக்கள் அவதி
கூடலூரில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நகரின் மையப்பகுதியில் உள்ள பெத்துக்குளம் நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது.
இதற்கிடையே குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகள் அடிக்கடி தீவைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் எழும் கரும்புகையானது நகர் முழுவதும் பரவுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். குப்பைகளில் இருந்து பரவும் புகையால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை தீவைத்து எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் குப்பைக்கிடங்கை நகர் பகுதிக்கு வெளியே அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.