காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

நாட்டறம்பள்ளி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆத்தூர்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-25 18:29 GMT

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆத்தூர்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட செங்கான் வட்டத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகளான சாலை வசதி தெருவிளக்கு வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என அவர்கள் புகார் கூறி வந்தனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இது வரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீரென காலி குடங்களுடன் ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

இது குறித்து தகவலறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு சில நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதன்பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்