நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், கிணறு, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-19 18:08 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், கிணறு, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீரில் மூழ்கி இறப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை, ஆறு, கிணறு போன்ற நீர்நிலைகள் நிரம்பி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நீர் தேங்கியுள்ள குட்டை, ஏரி, கிணறு உள்ளிட்டவற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்

அதனால் வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் வாலிபர்கள், மாணவர்கள், முதியவர்கள் குளம், ஏரி, கிணறு போன்ற நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளின் அருகே விளையாட அனுமதிக்க கூடாது. பெற்றோர் குழந்தைகளை தங்களின் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

பாலாற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாலாற்றில் இறங்கி குளிக்க வேண்டாம்.

அதேபோன்று பாலாற்றின் அருகே துணிகளை துவைப்பது மற்றும் பாலாற்றினை கடந்து செல்வது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்