பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

Update: 2022-06-17 14:13 GMT

கணபதி

கோவை மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி லெனின் நகர் பகுதிகளில் சாக்கடைகளை சுத்தம் செய்வதில்லை.குப்பைகளை அகற்றுவது இல்லை, உப்புத்தண்ணீர் சீராகவினியோகம் செய்யப்படுவது இல்லை எனக்கூறி கணபதியில் உள்ள சங்கனூர் சாலை ரூட்ஸ் கம்பெனி எதிரில் மும்தாஜ் என்பவர் தலைமையில் 50-க்கு மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அருண், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், எங்கள் பகுதியில் நோய் பரவும் சூழல் உள்ளது.

ஆகவே பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அனைவரும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்