பொதுமக்கள் சாலை மறியல்

சமூக ஆர்வலர் என்ற போர்வையில் ஊராட்சியில் பணி செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக கூறி பணிக்கம்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-30 14:15 GMT

பொள்ளாச்சி

சமூக ஆர்வலர் என்ற போர்வையில் ஊராட்சியில் பணி செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக கூறி பணிக்கம்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பொள்ளாச்சி அருகே உள்ள கிட்டசூராம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிலர், பணிகள் செய்ய விடாமல் தடுப்பதாக கூறி பணிக்கம்பட்டியில் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கோரிக்கைகளை மனுவாக எழுதி சப்-கலெக்டரிடம் கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு வந்து சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிட்டசூராம்பாளையம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சியில் அரசு நலத்திட்டங்கள், பணிகள் அனைத்தும் முடங்கி கிடக்கின்றன. சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் தவறான தகவல்களை கேட்டு எந்த பணியும் செய்யவிடாமல் இடையூறு செய்கின்றனர். 100 நாள் வேலை திட்ட ஆட்கள் பணிபுரியும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்