மக்கள் தொடர்பு திட்ட முகாம்; 12-ந் தேதி நடக்கிறது

மக்கள் தொடர்பு திட்ட முகாம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-07-04 18:41 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், எலந்தலப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, எலந்தலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே கிராம நிர்வாக அலுவலகத்தில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்