நல்லறிக்கை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; இன்று நடக்கிறது
நல்லறிக்கை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா காடூர் ஊராட்சியில் உள்ள நல்லறிக்கை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.