மக்கள் தொடர்பு திட்ட முகாம்
சொக்கலிங்கம்புதூரில், நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை அடுத்த சொக்கலிங்கம்புதூர் கிராமத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்குகிறார். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்தார்.