அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்பு

அரளிக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்றார்.

Update: 2023-10-18 19:15 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அடுத்த அரளிக்கோட்டை கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார். முன்னதாக ஊரட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி வரவேற்றார். தி.மு.க. மாவட்ட அவை தலைவர் கணேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் முத்துகுமார் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் மொத்தம் 1,112 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 12 லட்சத்து 95 ஆயிரத்து 38 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கி பேசினார்.

முன்னதாக, அரளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், அம்பலமுத்து, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், சிங்கம்புணரி நகர அவைத்தலைவர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், ஒன்றிய பொருளாளர் மனப்பட்டி பாஸ்கரன், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், மகளிர் அணி பவானி கணேசன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சதீஷ்குமார், புகழேந்தி, சூரக்குடி சிவசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளரும், பிரதிநிதியுமான முருகேசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர் ஞானி செந்தில், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பில்லாப்பன், முனியாண்டி, ரவிச்சந்திரன், புகழேந்தி, செவல்பட்டி மூர்த்தி, ஐயாபட்டி பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரகுமார், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்