கடலூரில் குடிநீர் குழாயை திறக்க கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்

கடலூரில் குடிநீர் குழாயை திறக்க கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-10-13 18:45 GMT

கடலூர் ஆல்பேட்டை சுந்தர்ராம்நகரில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த குழாய் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதை திறந்து பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்து உள்ளனர். ஆனாலும் அதை திறக்க நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை அப்பகுதி மக்கள், அடைத்து வைக்கப்பட்ட குடிநீர் குழாய்க்கு மாலை போட்டு, இறந்தவரை அடக்கம் செய்வது போல் இறுதி சடங்கு செய்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்